search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோண்டா சி.ஆர்.வி. முகென்"

    ஹோன்டா நிறுவனம் தனது சி.ஆர்.வி. மாடலில் முகென் என்ற பெயரில் புதிய கான்செப்ட் காரினை அறிமுகம் செய்தது. இதன் சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம். #Honda



    கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக ஹோண்டா இருக்கிறது. இந்நிறுவனம் தனது சி.ஆர்.வி. மாடலில் முகென் என்ற பெரில் புதிய கான்செப்ட் காரை கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் சமீபத்தில் காட்சிப்படுத்தியது.

    புதிய முகென் கார் வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் 18 இன்ச் அலாய் சக்கரங்கள் எஸ்.யு.வி. கார்களுக்கே உரிய கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. இது 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் விடெக் (VTEC) டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 193 ஹெச்.பி. திறனோடு 243 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.



    முகென் ரக கார்கள் இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் ஜப்பானில் மட்டும் இந்த ரகக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முன்னதாக ஹோண்டா நிறுவனம் சி.ஆர்.வி. ரக மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த காரில் பெட்ரோல் மாடல் ரூ.28.15 லட்சமாகவும், டீசல் மாடல் ரூ.30.65 லட்சம் விலையில் அறிமுகமானது.

    இது முற்றிலும் சி.கே.டி. (உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அசெம்பிள் செய்து விற்பது) என்ற அடிப்படையில் இங்கு விற்ப்னை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்து அவற்றை இந்தியாவில் தயாரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதேபோல முகென் மாடலையும் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
    ×